அவல நினைவில் ஆண்டுகள் இருபத்து நான்கு!!
அன்புடன் தம்பிக்கு...அக்கா எழுதும் மடல்......
வீட்டில் அனைவரும் நலமா, எவ்வளவுதான் அலைபேசியில் பேசிக்கொண்டாலும் எப்போதாவது இப்படி கடிதம் எழுதிக்கொள்வதில்தான் நானும் நீயும் அதிக மகிழ்வடைகிறோம். பார்ப்பவர்களுக்கு இது பைத்தியக்காரத்தனமாய் தோன்றலாம்....
ஆனால்.....உன் கடிதம் வந்துவிட்டால்.....அதை ஒரு பத்து தடவையாவது படித்துவிடுவேன்.....அந்த எழுத்துக்களின் வாசனையில் ஊர் நினைவுகளை முகர்ந்து முகர்ந்து அனுபவிப்பேன். மண்வாசனை அதில் கொட்டிக்கிடக்கும். உங்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் அந்த கடிதங்களை கடைபரப்பிவிடுவேன்...... அதில் நான் காணும் இன்பம் அலாதியானது.....
என்னோடு படித்த ஊர்மிளாவிற்கு இப்போதுதான் திருமணம் நடந்தது என்று சொன்னாய். ....மகிழ்ச்சி. அவள் இந்த மண்மீது தீராத காதல் கொண்டவள், அதற்காகத்தானே போராடச் சென்றாள்.....காலமும் கூட்டுச்சதியும் அவளைப்போன்றவர்களின் கனவுகளைச் சிதைத்துவிட்டதே.....புனர்வாழ்வு பெற்று வந்தவள், இப்போது மண்வாழ்வு கண்டது எனக்கு பெரும் மகிழ்வு. அவளோடு கதைத்தேன்.....நீண்ட நேரம் இருவரும் அழுதோம்.....நடந்தவைகளை நினைத்தும் நடப்பவைகளைப் பார்த்தும் அழுதோம்....
நாங்கள் இளையோராய் வாழ்ந்த காலம் என்பது எங்களுக்கு பொற்காலம். அப்போது இருந்த காலம் என்பது மிக அழகானது.....உன்னதமானது...மகத்துவமானது....
வாலிப வனப்பை எட்டிப்பிடிக்கத் துடித்த இளமைப் பருவம் அது. நீ மிகவும் சின்னவனாக இருந்தாய்.....அதனால் அந்த நினைவுகள் உனக்குள் எந்த அளவுக்கு இருக்கிறதோ எனக்கு தெரியவில்லை, காலம் மாறிவிட்டாலும் பற்றுக்கோட்டில் இருந்து சற்றும் மாறாது நீயும் வாழ்கிறாய் என்பது எனக்கும் ஆறுதல்... எங்கள் மன ஆழத்தின் எல்லையற்ற இந்த விசுவாசம் அப்பா எங்களுக்கு தந்த மாபெரும் சொத்து அல்லவா.
அங்கு ஓரிரு இளையோரின் செயற்பாட்டினை அறியும் போது வேதனையாகவும் துக்கமாகவும் உள்ளதென கூறினாய்...உண்மைதான்.....எனக்கும் இதயம் கனத்தது.
படத்திற்கு பாலாபிசேகமும், கட்டவுட்டும் பொங்கலும், என்றும் போதையும் வாளும், குடியும் கூத்தும் என்றும் எம் பிள்ளைகள் சீரழிவதை கேட்கும்போது மனம் படும் வேதனையை எப்படிச் சொல்ல, நாங்கள் பிழைப்பிற்காக புலம்பெயர்ந்தாலும் அங்கே தானே எங்கள் உயிர்ப்பு இருக்கிறது. அது அனுதினமும் எங்கள் உறவுகளைச் சுற்றியபடிதான் இருக்கும்.
காலையில் திகதியைப் பார்த்ததும் கடந்துபோன ஞாபகங்கள் மனதில் வட்டமிட்டது. அதனை உனக்கு எழுதி என் மனஆற்றாமையை தீர்த்துக் கொள்வதற்காய் இம்மடலை வரைகிறேன்.
அவல நினைவில் ஆண்டுகள் இருபத்து நான்குஆயிற்று!!
யாழ் மண்ணிலிருந்து நாங்கள் இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்று இத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டதென நினைக்கையில் ...மனம் ஆர்ப்பரிக்கிறது.
எங்கள் மண்மீது பற்றும் பாசமும் இருந்தது. நாங்கள் இந்த மண்ணின் உரித்துதாரர்கள் என்ற எண்ணம் எங்களுக்குள் வியாபித்து நின்றது. கூட இருந்த உறவுகள், சுற்றி நின்ற நட்புகள், கையில்வைத்து விளையாடிய பொம்மை, கறிசோறு ஆக்கிய மண் எல்லாமே எங்கள் கையை விட்டுப் போகும் என்று நாங்கள் கனவிலும் எண்ணியதில்லை. அந்த நாட்களில், எறிகணைக் கூவல்களில் எங்கள் இதயங்கள் வெடித்து ஓய்ந்தது உண்மைதான், கிபிரும், புக்காராவும், சுப்பர் சொனியும் எங்கள் மெல்லிய இதயங்களில் அமிலத்தை ஊற்றியது உண்மைதான்.....
எனினும் எங்கள் மண்ணில் இருந்து நாங்கள் நகர்வோம் என்ற உண்மை மட்டும் எங்களுக்கு தெரியாது.
அது ஒரு இளங்காலைப் பொழுது. முதல் நாள் இரவில் கூவிச்சென்ற எறிகணையில் இருந்து பாதுகாப்பிற்காக பதுங்குகுழிக்குள் சென்றுவிட்டு அதிகாலையில் தான் வீட்டிற்குள் வந்திருந்தோம். காலை பத்து மணியாகியும் நித்திரை கலையவில்லை, அம்மாவின் ஆய்க்கினைக்காக பதுங்குகுழிக்குள் இருந்தோமே தவிர அந்த நேரம், உயிரின் அருமை இன்னதென்று தெரியாது. அம்மாவை பேசியபடிதான் பதுங்குகுழிக்குள் வில்லங்கத்துக்கு இருப்போம். சில நேரங்களில் சமையலறையின் பிளாற்றுக்கு கீழே பதுங்கியதும் உண்டு.
அன்று அதிக நேரம் தூங்கி எழுந்தபோதும் யாரும் எதுவும் பேசக்காணோமே என எண்ணியபடி வந்தபோதுதான் வீட்டில் உறவினர்கள் சிலர் வந்திருப்பது புரிந்தது.
"பாவம் பெடியள், இரவிரவா பங்கறுக்க, இருந்ததுகள், அதுதான் படுக்கட்டும் எண்டு விட்டிருக்கிறன்...." அம்மா சொன்னது தெளிவாக கேட்டது.
திடீரென்று வீட்டில் உறவினர்கள் கூடியதும், மகிழ்வில் ஆர்ப்பரித்து நாங்கள் ஒன்றாக விளையாடச் சென்றதும் பசுமையான நினைவுகளாய் மனத்திரையில்......
"இனி இஞ்ச இருக்கிறதில வேலை இல்லை, பிள்ளையளை செல்லுக்கு பலி குடுக்காமல் அங்காலப்பக்கம் போறதுதான் சரி" உரத்து ஒலித்த அந்த குரலுக்கு "
"என்னண்ணா விசர்க்கதை கதைக்கிறியள், அங்கால எண்டா எங்கால போறது?"
"வன்னிப்பக்கம் தான்....."
"அண்ணா, தெரிஞ்சுதான் கதைக்கிறியளே.....வன்னியில போய் வாழமுடியுமே......இந்த பெடிபெட்டையள், ஒருநாள் கூட அங்க தாக்குப்பிடிக்காதுகள்....அது காடு, அங்க எப்பிடி"
"இஞ்ச பாருங்கோ.....இன்னும் ரெண்டு மூண்டு நாளில அவையளே அறிவிக்கப்போயினம்........மக்களை பாதுகாப்பு தேடி வன்னிப்பக்கம் போகச்சொல்லி, அப்பிடி அறிவிச்சா, சனநெருக்கடியில சரியான கஸ்ரம்.....நெரிசலில உயிர்போறதுக்கான சாத்தியம் கூட இருக்குது. அதைவிட இப்ப போறது நல்லது, நான் என்ர பெடியளைக்கொண்டு வன்னிக்கு போகப்போறன், நீங்கள் வாறதெண்டால் வாங்கோ.... இஞ்ச வைச்சு பெடியளை செல்லுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் பலி குடுக்கிறதெண்டால் குடுங்கோ...."
உரக்கச் சொன்ன பெரியப்பாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டுத்தான் அன்று எங்கள் எல்லோருடைய குடும்பமும் வன்னிக்கு வாழப்புறப்பட்டது.
அன்றைய நாள் எங்கள் மனதில் இருந்த துக்கமும் துயரமும் வார்த்தையில் சொல்லமுடியாதது.
நாங்கள் சின்னவர்களாக கூடி, வன்னிக்கு போகவேண்டாம் என்று முடிவெடுத்து அழுது, ஆர்ப்பாட்டம்செய்து, கெஞ்சி மன்றாடி ....அநதக் கணங்கள் ........
அன்றே, முட்டைமா, பொரிஅரிசி மா, உளுத்தம்மா, பலகாரம் என்று முடிந்ததை செய்து விட்டனர் வீட்டுப்பெண்கள். அடுத்த நாளே, வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டோம். வீட்டைவிட்டு வெளியே போகும் போது சின்வர்கள் நாங்கள் கதறிக்கதறி அழுதோம்,.....
படித்த பாடசாலை, ஓடிவிளையாடிய வெட்டைவெளி, காவோலை பொறுக்கிய பனந்தோப்பு, அன்னமுன்னா மரங்கள் என ஒவ்வொன்றையும் நினைத்து தேம்பிஅழுதோம், வன்னியில் வாழமாட்டோம் என அடித்து கூறியதும், வீட்டவர்களுக்குத் தெரியாமல் திரும்பி வந்துவிடுவோம் என திட்டம் போட்டதும் .......
காலம் ...எங்கள் நினைப்புகளில் எத்தனை மாற்றத்தை உண்டாக்கியது தெரியுமா, வன்னிக்கு போய் முதலில் நாங்கள் கஸ்ரப்பட்டது உண்மைதான், ஒரு பெரிய காணியில தென்னோலை குடிசை போட்டு எல்லாரும் ஒரு வீட்டில இருந்து...... சோளம் விதைச்சது, மிளகாய் கன்றும்.....மரவள்ளியும் நட்டது, முருங்கைத் தோட்டம் செய்து தைப்பொங்கலுக்கு உடுப்பு வாங்கினது.........ஈரமான நினைவுகளடா......
பெரியண்ணாவும் சுகிர் மச்சானும் .....இலக்கியா அக்காவும் போராடப் போனதும்....முதலில் அழுதாலும் அவர்களின் ஒப்பற்ற சிந்தனைகளில் நாங்கள் எங்களைத் தேற்றிக்கொண்டதும்... 'நீங்கள் எல்லாரும் சந்தோசமா நிம்மமதியா வாழ நாங்கள் போராடத்தான் வேணும்' எண்டு பெரியண்ணா சொன்னது, இப்பவும் காதில கேட்கிறமாதிரிக் கிடக்கிறது.
மூண்டுபேரும் வீரச்சாவடைந்தது எங்களை இன்னும் நிறைய யோசிக்கவைச்சது.
சித்தப்பா மலேரியா காய்ச்சல் வந்து செத்துப் போனது..... மனதில் வலி தந்தது.....ஆனா......அதுக்குப்பிறகும் அங்க இருந்து வர நாங்கள் விரும்பவில்லை.
2009இல வன்னியைவிட்டு இடம்பெயர்ந்தபோது, உயிரில் ஒருபாதியை யாரோ எடுப்பதைப்போல துடித்துப்போனோமே.
ஆனா....இவ்வளவு நடந்தும் அந்த நிலம் எங்களோட வேரோடிப்போனதை மறக்க ஏலாது.....வன்னிக்காடுகள் ...வெறும் காடுகள் இல்லை, உன்னதமானவர்களின் பாசறை, ஒப்பற்றவர்களின் வாழ்விடம்......அந்த காடுகள் இன்று வந்தவர்களால் அழிக்கப்படுவதை அறியும்போது உள்ளம் எரிகிறது......
எங்களுக்கு வாழ்க்கை தந்தது. மகிழ்வைத் தந்தது, பாதுகாப்பு தந்தது.....அந்தக் காடுகளில் எங்கள் தெய்வங்களின் மெல்லிய ஸ்பரிசங்கள் இன்னும் இருக்கிறதாய் தான் உணர்கிறேன்.
தம்பி....என் உணர்வுகள் பல நாளைக்குப்பின் இன்று வெள்ளைத்தாளில் எழுத்துகளாய் உன்னிடம் வருகிறது. இப்படி, அப்பஅப்ப, நினைப்பதில் தான் நிறைவு காண்கிறது மனம்.
தமிழரசி.
தமிழருள் இணையத்தளம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை