14 புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரம் கையளிப்பு!

14 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றுப் பத்திரங்களை இன்று (03) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் கையளித்தனர்.


அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு


Mlondi Solomon Dlamini - எஸ்வாத்தினி இராச்சிய உயர்ஸ்தானிகர்

Francois Delhaye - பெல்ஜியம் இராச்சிய தூதுவர்

Makarimi Abissola Adechoubou - பெனின் குடியரசின் தூதுவர்

Carlos Jose de Pinho e Melo Pereira Marques- போர்த்துக்கல் குடியரசின் தூதுவர்

Muhamed Cenqic - பொஸ்னியா & ஹெர்சகோவினா தூதுவர்

Ahmed Yousif Mohamed Elsiddig - சூடான் குடியரசின் தூதுவர்

Fatoumata Balde - கினி குடியரசின் தூதுவர்

Gabriel Pandureni Sinimbo - நமீபியா குடியரசின் உயர்ஸ்தானிகர்

Dionyssios Kyvetos - ஹெலனிக் குடியரசின் (கீறிஸ்) தூதுவர்

Juan Rolando Angulo - சிலி குடியரசின் தூதுவர்

Eleonora Dimitrova Dimitrova - பல்கேரிய குடியரசின் தூதுவர்

Brendan Ward - அயர்லாந்து தூதுவர்

Coromoto Godoy Calderon - வெனிசுலாவின் பொலிவேரியா குடியரசின் தூதுவர்

Tizita Mulugeta - எத்தியோப்பியா ஜனநாயக குடியரசின் தூதுவர்


இந்த புதிய இராச்சியங்களில் எசுவாத்தினி இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் கோலாலம்பூரிலும், பெனின் குடியரசின் தூதுவர் டோக்கியோவிலும், ஏனையோர் புதுடில்லியில் இருந்தும் தமது கடமைகளை ஆற்றுவர்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.