5 கட்சி தலைவர்கள் கூட்டம் மீண்டும் 30ம் திகதி யாழில்!!
பொது உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஐந்து தமிழ் கட்சிகளும் எதிர்வரும் 30ம் திகதி யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசுவதென முடிவாகியுள்ளது.
இன்று மாலை கொழும்பில் ஐந்து கட்சி தலைவர்கள் சந்திப்பு சடைபெறுமென திட்டமிடப்பட்டிருந்தபோதும், அதில் மூன்று கட்சி தலைவர்களே கலந்து கொண்டனர். இன்று இரண்டு கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதை நேற்றிரவு தமிழ்பக்கம் குறிப்பிட்டிருந்தது.
இரா.சம்பந்தனின் கொழும்பு வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் இரா.சம்பந்தன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
நேற்று மாலை அவசரமாக திட்டமிட்ட இந்த சந்திப்பென்பதால், அவர்களால் கலந்துகொள்ள முடியாமல் போயிருக்கலாமென கருதி, அடுத்த சந்திப்பை வரும் 30ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்துவதென முடிவாகியுள்ளது.
எதிர்வரும் 30ம் திகதி நடைபெறும் அந்த சந்திப்பின் பின்னரே, ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திப்பது, யாரை ஆதரிப்பதென்ற நிலைப்பாட்டை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்படும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை