ஞானசார தேரர் ஒரு மூக முடி ஔிந்து நிற்பது யார்?

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.



முல்லைத்தீவு நீராவியடியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்தும், நீதியை வலியுறுத்தியும் இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி பௌத்த பிக்குவின் உடல் ஆலய முன்றலில் எரிக்கப்பட்டதை கண்டித்தும் அடாவடியில் ஈடுபட்ட ஞானசார தேரர் மற்றும் அவரது குழுவினரையும் கைது செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.