பாகிஸ்தானை பங்கம் செய்ய சவுதி இளவரசருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் பிரதமர் மோடி

அணுஆயுத பயன்பாடு குறித்து ஐநா சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பொறுப்பற்று பேசியதையடுத்து, அந்த நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக செயலாற்றி வரும் நிலையில், பிரதமர் மோடி, இதுகுறித்து சவுதி இளவரசருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அந்நாட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றதில் இருந்தே, இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான இதுகுறித்து பாகிஸ்தான் எல்லைமீறி கருத்து தெரிவித்து வருகிறது.. காஷ்மீர் பிரச்சனையில் தலையிட வேண்டாம் என பல முறை இந்தியா எச்சரிக்கை விடுத்தும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அதை பற்றி ஐக்கிய நாடுகளின் பொதுக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். மேலும், இவரது உரையாடலின் ஒரு பகுதியாக, "அணு ஆயுதங்கள் கொண்ட இரண்டு நாடுகளுக்குமிடையே வழக்குகளும், சச்சரவுகளும் தொடரும் நிலையில், அது அணு ஆயுத போருக்கே வழிவகுக்கும்" என கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சை பல தலைவர்களும் வன்மையாக கண்டித்து கருத்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். 
இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானிற்கு பாடம் கற்பிக்கவும், அந்நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியிலும் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இதுகுறித்து சவுதி இளவரசர் முஹமது பின் சல்மானுடன், பிரதமர் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அந்நாட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில், இரு தலைவர்களும் சில முக்கிய தீர்மானங்கள் எடுப்பர் என எதிர்பார்க்க படுகிறது.
இதனிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சவுதி இளவரசரை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது உரையாடல், இந்தியா சவுதி இடையான உறவை மேம்படுத்தும் வகையிலும், கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க சவுதியின் ஆதரவை கோரும் வகையிலும் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கிறது.
https://www.tamilarul.net/
மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு சவுதியின் தலைநகரமான ரியாத் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிகச்சிறந்த மனிதருக்கான விருதளித்து சவுதி அரசு அவரை கௌரவப்படுத்தியது. தற்போது இரண்டாவது முறையாக பிரதமர் சவுதி செல்லவுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது. 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.