விடிகின்ற பொழுதுகளின் வேதனைகள்..!!

பொத்தலான அந்த
தூரிகை வழியே
ஒழுகிக் கொண்டிருக்கிறது
வர்ணங்கள் கலக்கப்படாத
வாளியொன்றில் நிரம்பித்
தழும்புகின்றன
அன்பின் அரவணைப்புகள்
கூரையோரம் படகுவிடும்
சிறுமியின் ஆவலில்
கரைபுரளும் கண்ணீராகத்
ததும்புகிறது
விடிகின்ற பொழுதுகளின் வேதனைகள்
உறக்கம் சுமக்கும்
உணர்வற்ற இரவுகளில்
மரித்துப்போகவும் நினைப்பதுண்டு
எத்தனையோ நினைவுகளைக்
கடந்தபோதிலும்
எத்தனையோ வறுமைகளைக்
கடந்தபோதிலும்
நிரப்பப்படாத அந்த
வெறுமை மட்டும் கனவுகளைச்
சுமந்தபடியே விடியும் வரை
பயணமாகின்றது.
-மீள்பவி-
கருத்துகள் இல்லை