வவுனியாவில் புலமைப் பரிசில் பரீட்சையில் ஆயிலடி அ.த.க.பாடசாலை வரலாற்று சாதனை!!

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சை முடிவுகள்  06.10.2019   வெளியாகியுள்ள நிலையில் வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட   நெடுங்கேணி ஆயிலடி அ.த.க.பாடசாலை மாணவி.எழுபரிதி திலகேஸ்வரன் 178 புள்ளிகளைப் பெற்று பாடசாலையில் வரலாற்று சாதனையொன்றை பதிவு செய்துள்ளார்.
  1926 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட ஆயிலடி அ.த.க.பாடசாலையில் இம்முறைதான் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் முதன் முறையாக மாணவியொருவர் சித்தியடைந்து பாடசாலையின் வரலாற்றிலே புதிய சாதனையொன்று நிகழ்த்தப்பட்டிருப்பதாக பாடசாலையின் அதிபர் ச.சௌந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.மேற்படி பாலசாலையில் ஒரேயொரு மாணவி பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.