ஈழத்து படைப்பாளிகளானஎம்மவர் குறும்பட திரை அறுவடைகள் யேர்மனிய திரையரங்கில்!!

எம்மவர் குறும்பட திரை அறுவடைகள் யேர்மனிய திரை ஆர்வலர்கள் மத்தியில் முதன் முறையாக திரையிடப்பட இருக்கின்றது என்ற நற் செய்தியை பெருமையுடன் அறியத் தருகின்றேன்.
இந்த திரையிடல் மொழிமாற்றத்துடன் 21.10.2019 திங்கள் மாலை காட்சிப்படுத்தப் படுகின்றது.
படங்கள்:
இயக்குனர் சபேசனின்
துணை
இயக்குனர் முருகனின்
விதி.
இயக்குனர் மதுஷனின்
ஊபாண் (ubahn)
மற்றும் சிபோ சிவகுமாரன் இயக்கத்தில் உருவான
மாயை

நம்மவர் கதைகளையும் வலிகளையும் எமது தேவைகளையும் சர்வமும் அறிந்திட எடுக்கப்படும் ஒரு சிறு முயற்சி இது. காலப்போக்கில் அனைத்து நாடுகளிலும் செயல்படும் நமது இயக்குனர்களின் குறும் காவியங்கள் இவ்வாறு திரையிடப்பட இருக்கின்றன.
ஏற்பாடும் ஒழுங்கமைப்பும்
சிபோ சிவகுமாரன்

எமக்கான படங்களை நாமே படைப்போம்
எம்மவரின் படைப்புகளுக்கு பேராதரவு கொடுப்போம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.