குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020 !!

குரு பகவானே போற்றி... போற்றி!

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள்கிழமை (விடிந்தால் செவ்வாய்க் கிழமை), 28 / 29.10.19 அன்று (அதிகாலை 3:40 மணி) குருபகவான் விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்கு சென்று அமர்கிறார்.


‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்பது ஜோதிட மொழி. அப்படிப்பட்ட குருவருளை நமக்கு அள்ளித்தரும் ஸ்தோத்திரங்கள் சில உண்டு. இந்த ஸ்லோகங்களை தினமும் சொல்லி வர குருவின் அருள்பார்வை நம்மை விட்டு அகலாது. குறிப்பாக, திங்கள், வியாழன் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர நாள்களில், இந்த ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டு வந்தால், அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும்; சகல சுபிட்சங்களும் உண்டாகும்.குரு பகவான்
பிரஹஸ்பதி தியானம்

ஸ்வர்ணாஸ்வ ரதமாரூடம் பீதத்வஜ ஸுஸோபிதம்

மேரோ: பிரதக்ஷிணம் ஸம்யகாசரந்தம் ஸுஸோபனம்

அபீஷ்டவரதம் தேவம் ஸர்வக்ஞம் ஸுரபூஜிதம்

ஸர்வகாமார்த்த ஸித்யர்த்தம் ப்ரணமாமி குரும் ஸதா

கருத்து : குருபகவான் பொன்நிறமான குதிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்து பயணிப்பவர். மேருமலையை தினமும் வலம் வருபவர். நாம் கேட்கும் வரங்களை அருள்பவர். தேவர்களால் பூஜிக்கப்படுபவர். இத்தகைய பெருமைகளை உடைய உம்மைப் பிரார்த்திக்கிறேன். சகலப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவீராக.

வியாழபகவானைப் போற்றும் துதிப்பாடல்களில் ஒன்று இது. தினமும் வீட்டில் விளக்கேற்றிவைத்து, இந்தப் பாடலை 21 முறை சொல்லி வழிபட்டால், துன்பங்கள் எல்லாம் தீரும் என்பது ஐதிகம்.

குணமிகு வியாழ குருபகவானே

மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்

பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா

கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்

கருவான காலம் முதலாகக் காக்கும்

கதியானாய் தேவர் குருவே

ஓம் பிரஹஸ்பதியே போற்றி போற்றி!

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.