கிளிநொச்சியில் 90ஆயிரம் வாக்காளர்கள்!!

கிளிநொச்சியில் இம்முறை ஏறத்தாள 90 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபரும் தேர்வத்தாட்சி அலுவலருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து 2,868 பேர் தபால் மூலமாக வாக்களிக்க உள்ளதாகவும், அவர்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அத்தாட்சிப்படுத்தும் அலுவலகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளதோடு அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தலா இரண்டு பொலிஸார் கடைமையில் ஈடுபடுத்தும் வகையிலும், வாக்கெண்ணும் பகுதிகளில் பாதுகாப்புக் கடமைகளில் பொலிஸாரை ஈடுபடுத்துவதற்கான ஒழுங்குபடுத்தல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் இடம்பெறும் காலப்பகுதி மழை காலம் என்பதால், வாக்களிப்பு நிலையங்களில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக முப்படையினர் மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவு உள்ளிட்ட பலருடன் ஆராயப்பட்டுள்ளதாகவும் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.