குமாரபுரம் பகுதியில் தனிமையில் வாழ்ந்த இளம் குடும்பஸ்தரின் சடலமே மீட்பு!

கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் தக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள பூட்டப்பட்ட வீடு ஒன்றிலிருந்தே இவ்வாறு சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியை சேர்ந்த 29 வயதான ஆணின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையின் தந்தையான நிதர்சன் குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.

குறித்த நபர் தொடர்பில் 5 நாட்களாக தொடர்பில்லாத நிலையில் உறவினர்கள் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.

குறித்த வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. சம்பவத்தை பொலிசாரிற்கு தெரியப்படுத்தியதன் பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தினை பொலிசார் மீட்டுள்ளனர்.

அவரது உயிரிழப்பு தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் மருத்துவ பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.