கைது செய்து துன்புறுத்தி வதைக்கும் மலேசிய அரசின் கொடும் செயலைக் கண்டிப்போம்!
தமிழினப்படுகொலையாளிகளான சிங்கள அரசுக்கு உதவும் வகையில் மலேசியாவில் அடைக்கலம் புகுந்த அப்பாவித் தமிழர்களை அடக்கி ஒடுக்கி அவர்களை பொய்குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்து துன்புறுத்தி வதைக்கும் மலேசிய அரசின் கொடும் செயலைக் கண்டிப்போம்!
மலேசிய நாட்டில் தமிழீழ விடுதலை புலிகளின் மீள் உருவாக்கத்திற்கு உதவியதாக கூறி பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட தமிழர்களின் மனைவி மற்றும் உறவினர்கள் தங்கள் உறவுகளை விடுவிக்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளனர்.
அவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு குரல் கொடுப்பதோடு இத்தகையை கொடுமைகளுக்கு உள்ளாகும் தமிழர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க தவறும் சர்வதேச சமூகத்தின் பாராமுகத்தை கண்டிப்போம்.
கொட்டும் மழையில் கண்ணீரோடு மூன்று பெண்கள் யாரும் அற்றவர்களாக வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்.
உலகே உனக்கு கண் இல்லையா?
தமிழினமே உனக்கு இதயமே இல்லையா?
மனித உரிமை அமைப்புகள் இந்த விடயங்கள் குறித்து உடன் செயல்பட்டு தமிழர்களின் பாதுகாப்பை மலேசிய அரசுக்கு உடன் அழுத்தம் கொடுத்து தமிழர்களை விடுவிக்க குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துவோம்!
எங்கு சென்றாலும் ஏதிலியாக யாரும் அற்றவர்களாக தமிழர்கள் அடிவாங்கி அடக்கப்படும் கொடுமை என்று மாறும்?
அடக்குமுறைகள் கங்கையில் தமிழினம் ஒற்றுமையாக அணி திரண்டு தட்டி கேட்பார்கள் என்றால் இந்த கொடுமைகள் எம் மக்களுக்கு நிகழுமா?
கருத்துகள் இல்லை