தேசிய மட்ட பளுதூக்கலில் முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகா வித்தியாலயம் இரு தங்கப் பதக்கங்கங்கள்!

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகள் அண்மையில் பொலநறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ரி.தர்சிகா 17 வயதிற்குட்பட்ட 49 கிலோ நிறைப் பிரிவில் சினெச் முறையில் 43 கிலோ பளுவையும் கிளின் அன் ஜக் முறையில் 54 கிலோ பளுவையும் ஒட்டுமொத்தமாக 97 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும் 71 கிலோ எடைப் பிரிவில் ஈ.ஜீவிதா சினெச் முறையில் 40 கிலோ பளுவையும் கிளின் அன் ஜக் முறையில் 50 கிலோ பளுவையும் ஒட்டுமொத்தமாக 90 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும் சுவீகரித்துள்ளனர்.
அத்தோடு அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டியில் 17 வயதுப் பிரிவில் ஒட்டுமொத்தமாக புள்ளிகளின் அடிப்படையில் 3ம் இடத்தை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.தேசிய மட்ட பளுதூக்கல் முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகா வித்தியாலயம் இரு தங்கப் பதக்கங்கள்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கலில் முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகா வித்தியாலயம் இரு தங்கப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.