முஸ்லிம் சமூகம் இரு பக்கமும் நிற்பதே நமக்குப் பாதுகாப்பு!

முஸ்லிம் சமூகம் இரு பக்கமும் நிற்பதே நமக்குப் பாதுகாப்பாகும். எனவே, இரு தரப்பாக முஸ்லிம் மக்களும் நின்று கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் தமது வாக்குகளை அளிக்க முன்வர வேண்டும் என, ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.


ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌த்தில் அளுத்க‌ம‌, பேருவளை போன்ற‌ இடங்களில் ஏற்பட்ட பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ அந்த‌ அர‌சாங்க‌த்தை மாற்றுவ‌த‌ற்கு முத‌லில் முன் வ‌ந்த‌வ‌ன் நானாகும். கார‌ண‌ம், நான் எப்போதுமே ச‌மூக‌த்தை நேசிப்ப‌வ‌ன்.

ஆனாலும், அந்த‌ அர‌சாங்க‌த்தை மாற்றி ஐ.தே.க‌. த‌லைமையிலான‌ இந்த‌ அர‌சை நாம் கொண்டு வ‌ந்த‌ போது, இந்த‌ அர‌சு க‌ட‌ந்த‌ அர‌சை விட‌ மிக‌ மோச‌மான‌ அர‌சாக‌ இருந்த‌தைக் க‌ண்டோம் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.