யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு விரைகிறது இந்திய நிபுணர் குழு!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை பரிசீலனை செய்து, இந்திய அரசாங்கத்துக்கு இறுதி அறிக்கையைக் கொடுப்பதற்காக, இந்திய நிபுணர்கள் குழுவொன்று நாளை மறுநாள் பலாலிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலைய அபிவிருத்திகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி விமான நிலையம் அதிகாரபூர்வமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரால் திறந்து வைக்கப்படவுள்ளது.
திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் திறப்பு விழா அன்றே சென்னையிலிருந்து முதல் விமானம் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கிறது.
இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான எயர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர், விமானமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதையை ஆய்வு செய்து, இந்திய அரசாங்கத்துக்கு இறுதியான அறிக்கையை சமர்ப்பிக்க இந்திய நிபுணர்களின் குழு நாளை மறுநாள் யாழ்ப்பாணம் வரவுள்ளது.
இதேவேளை, தமிழ் நாட்டிற்கான 7 விமான சேவைகளை ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாரத்திற்கு 12 விமான சேவைகளாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை