மலேசியாவில் கைதானோரை தீபாவளிக்கு முன்னர் விடுவிக்கக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக குற்றச்சாட்டப்பட்டு மலேசியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்கக் கோரி கோலாலம்பூரில் 25.10.2019 மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்தப் போராட்டத்தில் மலேசியா வாழ் தமிழ் மக்கள் மற்றும் மலேசிய வம்சாவளி மக்களும் இணைந்துகொண்டனர்.

தீபாவளிக்கு முன்னர், கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என போராட்டத்தின்போது அவர்கள் வலியுறுத்தினர்.

எனினும் கைது செய்யப்பட்டவர்களை தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு விடுவிப்பது சாத்தியமல்ல என்று மலேசிய தலைமைப் பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தின்போது கைதானவர்கள் தங்கள் குடும்பத்தைப் பிரிந்திருப்பது எமக்கும் வருத்தமளிக்கிறது. எனினும் நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் வேறு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கைதானவர்களின் குடும்பத்தார் உள்பட அனைத்துத் தரப்பினரும் விசாரணை முழுமையடையும் வரை பொறுமை காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டவர்கள் நல்லமுறையில் கவனித்துக் கொள்ளப்படுவர்கள். சட்டம் அவர்களுக்கு வழங்கியுள்ள உரிமை நிலைநாட்டப்படும் என்றும் காவல்துறை தலைவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள மலேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட ஐவரின் மனைவிமார் மலேசிய பொலிஸ் தலைமையகம் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.