ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரணில் சிறைசெல்ல நேரிடும்!
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் சிறைசெல்ல நேரிடும் என்பதை அறிந்தே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவிற்கு எதிராக பல சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளார். அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு மாற்று வழிகளை பிரயோகித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் முழு ஒத்துழைப்புடனேயே மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி இடம் பெற்றது. அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானோர். இம்மோசடியுடன் தொடர்புப்பட்டவர்கள். அவர்களே இன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக அணிதிரண்டுள்ளார்கள்.
பிணைமுறி மோசடி விவகாரம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவித்தால் கட்சியின் ஆதரவு கிடைக்காது.
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தோற்றம் பெற்றால் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார். அதன் பின்னர் தான் சிறை செல்ல நேரிடும் என்பதை அறிந்தே பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவிற்கு எதிராக பல சட்ட சிக்கல்களை மேற்கொண்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்கவின் குடியுரிமையினை ரத்து செய்வதற்கான அரசியல் சூழ்ச்சியினை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியே தற்போதும் முன்னெடுக்கப்படுகின்றது. மாற்று வழியினை பிரயோகித்தாவது பொதுஜன பெரமுன ஜனாதிபதி தே
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை