தேசியம், தாயகம், சுயநிர்ணயம் அடிப்படையில் மக்களுக்கான தீர்வு இலக்கை அடைய போராடுவோம்!!

ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏகமனதாக தமிழரசு ஊள்ளிட்ட 5 கட்சிகள் ஏற்றுக்கொண்டு தென்னிலங்கை சனாதிபதித்தேர்தலில் ஒருமித்து வாக்கு சேகரித்து  மீண்டுமொரு பௌத்த சிங்கள பேரினிவாதியை கொண்டு வர ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.


எப்போதும் போல முன்னணி தமிழ்மக்கள் நலனில் மட்டுமே அக்கறை கொண்டவர்களாக ஒற்றையாட்சி இடைக்கால வரைபை ஏற்றுற்கொள்ளும் தீர்மானத்தை நிராகரித்து தனித்து வெளியேறியது.

வெறுமனே பதவிகளில் நாட்டம் கொள்ளாமல் தமிழன் நலனின் அக்கறையுடன் செயற்படவே முன்னணி விரும்புகின்றது.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் நாட்டில் ஒற்றையாட்சித்தத்துவத்தை கொண்ட அரசியலமைப்பு ஆட்சிமுறைமையை ஏற்றுக்கொண்டு வாழ்வதானது ஓரினம் தன்னைத்தானே அழித்துக்கொள்வதற்கு ஒப்பான செயலாகவே அமையும்.

ஆகவே எங்களை நாங்களே அழித்துக்கொள்ள ஒரு பொறுப்பு வாய்ந்த தமிழ்த்தேசிய அரசியல் கட்சியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஒரு போதும் விரும்பவில்லை .

தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் எமது மக்களுக்கான தீர்வு அமையும் வரை தொடர்ந்து அந்த இலக்கை அடைய போராடுவோம்.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.