இரு குழந்தைகளை கிணற்றில் எறிந்த தாய்!
வவுனியா- நெடுங்கேணி பகுதியில் தாயொருவர் தனது இரு பிள்ளைகளையும், கிணற்றில் எறிந்த நிலையில், அவரும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளமையினால் வவுனியா சோகத்தில் மூழ்கியுள்ளது.
அண்மையில் விபத்தில் மரணித்த பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த உதயன் என்பவருடைய மனைவி, தனது நான்கு வயது பெண் பிள்ளை மற்றும் இரண்டரை வயது ஆண் பிள்ளை ஆகியோரை கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றுள் குதிக்க முயன்றபோது அயலவர்களால் தாய் தடுக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளார்.
ஆனால், இரண்டரை வயது மகன் கிணற்றுக்குள்ளேயே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று உயிருடன் மீட்கப்பட்ட 4 வயது பெண் குழந்தை, அவசர சிகிச்சைக்காக அம்புலன்ஸ் ஊடாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தாயாரை, நெடுங்கேணி பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
நன்றி ஆதவன்

.jpeg
)

கருத்துகள் இல்லை