திரும்பிச் செல்லாதீர்கள் மோடி: ட்விட்டரில்!
தமிழகப் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி சென்ற நிலையில், புது ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது
.
சீனா - இந்தியா இடையேயான முறைசாரா உச்சி மாநாட்டுக்காக இரண்டு நாட்கள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்னை வந்தார். தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்தபடி சீன அதிபருடன் மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகியவற்றைப் பார்வையிட்டார். அதன்பிறகு, நேற்று மீண்டும் இரு நாட்டுத் தலைவர்களும் கோவளம் விடுதியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் மோடி டெல்லி புறப்பட்டுச் சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங் நேபாளம் சென்றடைந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போதெல்லாம், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ-பேக் மோடி (#GoBackModi) என்ற ஹேஷ்டேக் நெட்டிசன்களால் டிரெண்ட் செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் மோடி சென்னை வந்தபோதும் கோ-பேக் மோடி ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மோடியை வரவேற்று வெல்கம் மோடி (#TNWelcomesModi) என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆனது.
கோ-பேக் மோடி (#GoBackModi) டிரெண்டிங் தொடர்பாக சில புலனாய்வு அமைப்புகள் விசாரித்தபோது, பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் இந்த ஹேஷ்டாக்கை உருவாக்கி, ஒவ்வொரு முறையும் டிரெண்டிங் ஆக்கி வருவது தெரியவந்தது.
இதற்கிடையே பிரதமர் மோடி நேற்று (அக்டோபர் 12) மீண்டும் டெல்லி புறப்பட்ட நிலையில், திரும்பிச் செல்ல வேண்டாம் மோடி (#DontGoBackModi) என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகியுள்ளது. இதைப் பயன்படுத்தி மோடியைப் பாராட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர். தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை அணிந்தது, மாமல்லபுரம் கடற்கரையிலுள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தது உள்ளிட்டவை தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்து கருத்து தெரிவித்தனர். இந்த ஹேஷ்டேக் நேற்று நீண்ட நேரம் இந்திய அளவிலான டிரெண்டிங்கில் இடம்பிடித்தது.
கருத்துகள் இல்லை