பிகில் கதை திருட்டு வழக்கு: நடப்பது என்ன?
பிகில் படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி கே.பி.செல்வா தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம், வரும் தீபாவளி அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் தீவிரமாக படக்குழு இயங்கி வருகின்றது. பெண்கள் கால்பந்தாட்டக் குழுவை மையப்படுத்திய இப்படத்தை ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.
கே.பி. செல்வா எனும் உதவி இயக்குநர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிகில் படத்தின் கதை தன்னுடையது என உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த விவகாரம் காப்புரிமை சம்பந்தப்பட்டது அதனால் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு, உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனால் கே.பி.செல்வா, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
கே.பி.செல்வாவின் சட்டப்போராட்டம்
இதுபோன்ற வழக்குகளை உயர்நீதிமன்றம் தான் விசாரிக்கவேண்டும் என்று கூறப்பட்டதால் கே.பி.செல்வா வழக்கைத் திரும்பப் பெற்றார். எனவே வழக்கு தள்ளுபடி ஆனது.
அதன்பின், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க எண்ணிய கே.பி.செல்வாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது என்கிற உத்தரவு நகலைப் பெறவே மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டதாம் கே.பி.செல்வாவுக்கு. அது இருந்தால்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும் என்பதால் தினந்தோறும் நீதிமன்றம் சென்று முறையிட்டும் அந்த உத்தரவு நகலை மிக தாமதமாகவே பெற முடிந்ததாம்.
அதைப் பெற்று படித்துப் பார்த்த போது மேலும் அதிர்ச்சியடைந்திருக்கிறார் கே.பி.செல்வா. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யமுடியாது என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதே செல்வாவின் அதிர்ச்சிக்கு காரணம்.
உத்தரவு நகலை உடனே கொடுக்காமல் இழுத்தடித்தது உத்தரவில் மேல்முறையீட்டுக்குத் தடை ஆகிய அதிர்ச்சிகளை மீறி மீண்டும் சட்டப்போராட்டம் நடத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் கே.பி.செல்வா.
அவர் தொடர்ந்த வழக்கில், பிகில் படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாட்டத்தை மையமாக 256 பக்கங்கள் கொண்ட கதையை தான் தயார் செய்து அதனை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்தாகவும் தனது தரப்பில் கூறியிருக்கிறார். மேலும், தற்போது தன்னுடைய கதையை, இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளதாகவும், இதனால் தனக்கு பாதிப்பு ஏற்படும், எனவே பிகில் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார் கே.பி.செல்வா.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று(அக்டோபர் 15) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிகில் வழக்கு தொடர்பான ஆவணங்களை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் அட்லீக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை(அக்டோபர் 16) ஒத்திவைத்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“இயக்குநர் அட்லீயின் சார்பில் கடுமையான வாதங்கள்(உரிமையியல் நீதிமன்றத்தில்) எடுத்து வைக்கப்பட்ட நிலையில், தோல்வியை உணர்ந்த கே.பி.செல்வா, வழக்கைத் திரும்ப பெறுவதற்கு அனுமதி கோரியும், புதிதாக ஒரு வழக்கு தொடுக்க உரிமை கேட்டும், விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தார்.
வழக்கைத் திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம், இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க உரிமை வழங்க மறுத்து விட்டது. முடிவில், வழக்கை வாபஸ் பெற்றதன் பேரில், தள்ளுபடி ஆனது” என அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் அப்போது சொன்ன செய்திக்கு மாறாக இப்போது வழக்கு நடந்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை