தமிழருக்கு தீர்வு கிடைத்திருக்காது – வரதராஜ பெருமாள்!

2009ம் ஆண்டு யுத்தம் முடிந்திருக்காவிட்டாலும் கூட இதுவரையிலும் தமிழர்களுக்கான தீர்வு கிடைத்திருக்காது என வட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பேரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கும் பிரசாரக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) யாழில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காமையினாலேயே கோரிக்கைகள் வலுப்பெற்று போராட்டம் நடக்க வேண்டி ஏற்பட்டது.

1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தத்தோடு கிடைத்த வடக்கு கிழக்கு மாகாண சபையை நாங்கள் காப்பாற்றியிருந்தால், அதனை பாதுகாக்க தமிழ் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

1990 ற்கும் 2000 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சாவை தவிர எமக்கு ஒன்றும் கிடைத்துவிடவில்லை. யுத்தம் முடிவடைந்திருந்தால் கூட நாட்டில் சமாதானம் வந்திருக்காது.

யுத்தம் நடந்தது, அதில் பலர் உயிரிழந்தனர், துன்ப சம்பவங்கள் இடம்பெற்றன, அவற்றை எண்ணி நாம் ஒப்பாரிவைக்காமல் எதிர்காலம் நோக்கி நாம் நகர்ந்து செல்ல வேண்டும்” என கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.