பிரசவமானது ‘போர்க்காலங்களில் வன்னி விவசாயிகள்’ நூல்!!

கலாநிதி ஜெயசீலன் ஞானசீலனின் ‘போர்க்காலங்களில் வன்னி விவசாயிகள்'(vanni farmers in wartimes)எனும் ஆங்கில நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தின் பம்பைமடு கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற்றது.


இவ் விழாவில் முதன்மை விருந்தினராக, யாழ் பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியான பேராசிரியர் க.கந்தசாமி, சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவின் தலைவரான பேராசிரியர் ச.சிறீசற்குணராஜா மற்றும் கௌரவ விருந்தினராக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.

இந்நூலுக்கான விமர்சன உரையை கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆய்வு மற்றும் அபிவிருத்தி மையத்தின் மேலதிக பணிப்பாளர், கலாநிதி எஸ்.ஜே.அரசகேசரி ஆற்றியிருந்தார்.

கலந்துரையாடல் நிகழ்வில் பேராசிரியர் சிறீசற்குணராஜா ‘போர்க்காலங்களில் வடக்கின் கல்விப் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளில் உரையாற்றினார்;. அதனைத் தொடர்ந்து திறந்த பல்கலைக்கழகத்தின் பொருளாதாரதுறை முதுநிலை விரிவுரையாளரும் சமூக விஞ்ஞ பீடத்தின் பீடாதிபதியுமான கலாநிதி எஸ்.என்.மொறாயஸ் அவர்கள் ‘போர்க்காலங்களில் வடக்கின் பொருளாதார பாதுகாப்பு’ என்ற தலைப்பில் தனது கருத்துக்களை பகிர்ந்தார்;.

வவுனியா வளாகத்தின் சூழலியல் விஞ்ஞானத்துறையைச் சார்ந்த முதுநிலை விரிவுரையாளரான கலாநிதி ச. விஐயமோகன் ‘போர்க்காலங்களில் வடக்கில் வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இன்னல்கள்’; பற்றி விளக்கியிருந்தார்.

இந்நூலானது போர்க்காலங்களில் வடக்கின் வன்னி விவசாயிகள் எதிர்கொண்ட பன்முகப்பட்ட வாழ்வாதார மனிதப் பாதுகாப்புப் பற்றிய பிரச்சினைகளையும் அதற்கு அவர்கள் எவ்வாறு முகம் கொடுத்து தம் இருப்பை நிலை நிறுத்தினார்கள்; என்பதைப் பற்றியும் தெளிவூட்டுவதுடன், கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியில்; வன்னிக்குள் அவர்கள் கையாண்ட எதிர்த்து சமாளிக்கக்கூடிய, ஈடு செலுத்தக் கூடியதான, அவர்கள் கண்டுபிடித்து பயன்படுத்திய உத்திகளைப்பற்றியும் சிறப்பாக எடுத்து இயம்புகின்றது.

இலங்கைத் தமிழர் வரலாற்றில் இந்நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதில் இந்நூல் முக்கிய பங்காற்றுகின்றது.

நூலின் சிறப்பு பிரதிகளை வியாபாரக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அம்பலம் புஸ்பநாதன், பிரயோக விஞ்ஞானபீடத்தின் பீடாதிபதி கலாநிதி அனந்தினி நந்தகுமாரன், மற்றும் மன்னாரை பிரதிநித்துவப்படுத்தும் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் குணசீலன் ஞானசீலன் ஆகியோர் கலந்துகொண்டு பெற்றுக்கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.