வெள்ளோட்டம் கண்டது தேனுவாரா மெனிகே!

இறக்குமதி செய்யப்பட்ட ‘S14 Chinese Power set’ என்ற ‘தேனுவாரா மெனிகே’ எனப்படும் நகராந்த கடுகதி ரயிலானது கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து இன்று காலை பதுளை நோக்கி தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.


தேனுவாரா மெனிகேயின் ஆரம்ப விழா இன்று காலை 6.45 மணியளவில் கோட்டை ரயில் நிலையத்தில் தனது பயணித்தை ஆரம்பித்து பதுளை நோக்கி புறப்பட்டது.

இந்த ரயில் ஒவ்வொரு நாளும் காலை 6.45 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டு மாலை 3.27 மணிக்கு பதுள்ளையை சென்றடையும். அதே ரயில் பதுளையிலிருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு மாலை 4.03 மணிக்கு கொழும்பு கோட்டையை அடையும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கடுகதி ரயிலில் காட்சி கூடங்கள் மற்றும் முதலாம் , இரண்டாம் ஆசன வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.இந்த ரயிலில் பிரயாணம் செய்ய விரும்பும் பயணிகள் ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்துக் கொள்ளலாம்.

முதல்தர பெட்டிகளில் 88, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 96 மற்றும் மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் 266 உட்பட மொத்தம் 250 பயணிகளை இந்த ரயில் கொண்டு செல்ல முடியும் என்று அவர் கூறினார்.

முதல்தர பெட்டிகளில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கான ரயில் கட்டணம் 1,700 ரூபாவும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு 1,000 ரூபாவும், மூன்றாம் வகுப்பு பெட்டிகளுக்கு 700 ரூபாவும் அறவிடப்படுகிறது.

குறித்த ரயில் பொல்ஹாவல, ரம்புக்கனா, பேராதெனிய, கண்டி, கபளை, நவலபிட்டியா, ஹட்டன், தலவாக்கலை, நானு ஓயா, அம்பேவேலா, பட்டிபோலா, அப்புத்தளை, தியத்தலாவா, பண்டாரவளை, எல்ல, தேமோதரை மற்றும் பதுளை ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.