சந்திரயான் 2 நிலவில் ஆர்கான் 40 வாயு உள்ளதை உறுதிப்படுத்தியது!

நிலவில் ஆர்கான் 40 வாயு இருப்பதை சந்திரயான் 2 விண்கலம் உறுதிப்படுத்தியுள்ளது.


இஸ்ரோ விஞ்ஞானிகள் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் – 2வின் விக்ரம் லேண்டர் செயலிழந்தது.

எனினும், ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான் 40வாயு மூலக்கூறுகள் இருப்பதை ஆர்பிட்டர் கலனிலுள்ள சேஸ் 2 என்ற கருவி உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்த ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் ரேடியோ அலைக்கற்றைகளை உருவாக்க பயன்படக் கூடியது என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், பூமியில் அரிதாக காணப்படும் வாயுவில் ஆர்கான் 40தும் ஒன்று எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.