சிறையில் உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்துகின்றனர் – முருகன் குற்றச்சாட்டு!

சிறையில் உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாக ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.


சிறைவளாகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முருகன் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், முதலமைச்சருக்கு தான் அனுப்பிய மனுவை, நான்கு நாட்களாக அனுப்பாமல் சிறை நிர்வாகமே வைத்துள்ளதாகவும், கைப்பேசி பயன்படுத்தியதாக திட்டமிட்டு தன் மீது பழி சுமத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விடுதலையும் செய்யாமல், ஆன்மிகவாதியாகவும் வாழ விடாமல் கொடுமைப்படுத்துவதாகவும் முருகன் வேதனை தெரிவித்தார்.

வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனின் அறையிலிருந்து செல்போன், சிம்கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக பாகாயம் பொலிஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.