சென்னை - யாழ் விமான கட்டணம் குறைப்பு!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இம் மாதம் 10 திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், விமான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.


இந்திய விமான நிறுவனமான Alliance Air – Air India என்ற நிறுவனம் சென்னை விமான நிலையத்திற்கும் யாழ்ப்பாண விமான நிலையத்திற்கும் இடையில் வர்த்தக பயணிகள் விமான சேவையை இம் மாதம் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது.

இது தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் விமான சேவை அறிமுகத்தை முன்னிட்டு சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஒருவழி விமான கட்டணம் 7,900 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கு இடையிலான விமான கட்டணம் 15,700 ரூபாய்யாகும்.

இதற்கு மேலதிகமாக FITS Aviation Ltd என்ற இலங்கை விமான சேவைகள் நிறுவனமும் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் எதிர்வரும் 8 ஆம் திகதி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

எனினும் இந்த விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கும் திரிச்சிக்கும் இடையில் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் சேவையை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்படத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.