கனவு சுமந்தவனுக்காக.......கவிதை!

சு. ப. உன் அடைமொழி,
சுதந்திர தமிழீழம்
உன் எண்ணத்தின்
தனி மொழி....

கனிவு கற்றுத்தரும்,
சிரிப்பு சாதிக்கும்,
 என்பதற்கு
சித்திரனே நீ உதாரணம்.....

ஒப்பற்ற இலட்சியத்தில்
ஓயாது உழைத்தவனே,
எம் தாயக வேந்தனின்
உன்னத தம்பியே.......

உலகம் சுழன்று வந்து
உரமூட்டினாய் ஈழத்திற்கு,
பாதகர்கள் உன் சிரிப்பை
பாதியிலே கொன்றனரே....

கைத்தடி காண்கையில்
காவியனே உன் ஞாபகங்கள்...
தமிளோடு  நீ சுமந்த
செல்வம் எங்கள் தேசம் தானே......

உன்னைக் காக்கவென்று
உன் மீது தாம் விழுந்து
தாங்கிய உன்னதர்கள்
உள்ளமது கோவிலையா......

உன் வீர உடல் காண்கையிலே
குருதி கொதித்தது,
உயிர் துடித்தது,
ஓய்ந்துபோனதோ எம்
சமாதானப்புறா என்று......

வான வீதியில்
வண்ணத்தாரகையாய்
நீ இன்னும் சிரிப்பதாய்
மன ஓரத்தில் ஒரு நினைவு......

சாயாத உன் கனவுகள்
சாகாது ஒருபோதும்.....
காலம் பதில் சொல்லும்....
காத்திரு நீ காந்தளாகி.......

தமிழரசி.....
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo










கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.