சந்திரிகாவின் கட்சி உறுப்புரிமையை நீக்க தீர்மானம்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்டவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமையினைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பான இறுதித் தீர்மானம், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ள கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமையவே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இரண்டு உடன்படிக்கைகளின் அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை