கோத்தபாய பிரச்சார பொதுக்கூட்டத்தில் எதிர்ப்பை வெளியிட்ட மக்கள்!

கல்முனையில் கோத்தபாய ராஜபக்ச அவர்களை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ எல் எம் அதாவுல்லா அவர்கள் உரையாற்றிய போது கல்முனை பொலிஸாரால் வழங்கப்பட்ட நேரம் முடிவடைந்து விட்டதாக கூறி ஒலிவாங்கி நிறுத்தப்பட்ட போது அங்கு குழுமியிருந்த மக்கள் பொலிஸாருக்கு எதிராக கூக்குரலிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கின்ற தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களை ஆதரித்து தேசிய காங்கிரஸ் கல்முனை மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சார பொதுக்கூட்டம் கடற்கரை வீதியில் இடம்பெற்றது.

இன்று மாலை 6 மணியளவில் ஆரம்பமான இப் பொது கூட்டம் பத்து முப்பது மணி அளவில் நிறைவுக்கு வந்தது.

கல்முனை பொலிஸாரினால் 10 மணிவரை மாத்திரமே ஒலிபெருக்கி பாவிப்பதற்கு நேரம் வழங்கப்பட்டதாக கல்முனை போலீஸின் சார்பில் அங்கு கடமையிலிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தெரிவித்து முன்னாள் அமைச்சர் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ எல் எம் அதாவுல்லா அவர்கள் உரையாற்றிய போது ஒலிபெருக்கியை செயற்படாமல் தடுத்தார் அப்போது அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக இருக்கின்ற சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து இடம்பெறுகின்ற பிரச்சார பொதுக் கூட்டங்களின் போது நள்ளிரவு 12 மணியை தாண்டியும் பொலிஸாரால் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களை ஆதரித்து இடம்பெறுகின்ற பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு இவ்வாறு பத்து மணிவரை மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டதை கண்டிப்பதாக அங்கு குழுமியிருந்த மக்கள் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இறுதியாக 10 நிமிடம் 15 நிமிடம் 20 நிமிடம் என வழங்கப்பட்டு மேலதிகமாக பேசுவதற்காக 35 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அங்கு போலீசாரிடம் பேசிய தேசிய காங்கிரஸ் தலைமை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் நிறைவுக்கு வருகின்ற காலம் நெருங்கிவிட்டது.

அவர்களுக்கு ஆதரவாக பொலிஸ் திணைக்களம் செயற்படுவது நிறுத்தப்பட வேண்டும். எல்லோருக்கும் நீதியான முறையில் நீதி சமனாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். எல்லோருக்கும் சம நீதி வழங்கப்பட வேண்டும் பொலிஸார் ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்படக் கூடாது என கண்டிப்பாக அங்கு பேசினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பேசுகின்ற மேடைகளுக்கு நள்ளிரவை தாண்டி பேசுவதற்கு பொலிஸாரால் அனுமதி வழங்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பான கூட்டங்களுக்கு இவ்வாறு தடங்கல் ஏற்படுத்தும் இந்த சம்பவங்களை போலீசார் செய்வது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அங்கு பொலிஸாருக்கும் விழா ஏற்பாட்டு குழுவினருக்கும் இடையில் சிறு சலசலப்பு ஏற்பட்டு இறுதியில் கூட்டம் சுமுகமான முறையில் நிறைவுக்கு வந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.