இலக்கை அடைகிறது சமையல் சாதனத்துடன் சென்ற விண்கலம்!!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள வீரர்களுக்கு அனுப்பப்பட்ட அதிநவீன சமையல் சாதனம் அவர்களை சென்றடையவுள்ளது.


இதன்படி சைக்னஸ் விண்கலம் இன்று (திங்கட்கிழமை) சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையவுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் பிஸ்கட், சொக்லேட் போன்றவற்றைத் தயாரிக்க மா, மைக்ரோவேவ் சாதனம் ஆகியவை அமெரிக்காவின் வர்ஜீனியா வொலப்ஸ் தீவில் இருந்து 3.7 தொன் எடைகொண்ட சைக்னஸ் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டது.

அதிகபட்ச வெப்பம், ஈர்ப்பு விசை இல்லாத நிலை ஆகிய சூழல்களில் பிஸ்கட் சுடும்போது, அதன் வடிவம், அமைப்பு ஆகியவை எப்படி இருக்கும் என விஞ்ஞானிகள் ஆராயவுள்ளனர்.

மேலும் கதிரியக்கத்துக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் உடை மற்றும், ஸ்போர்ட்ஸ் கார் உதிரிப் பாகங்கள் உள்ளிட்டவையும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.