சுகபோகத்திற்காகவே கூட்டமைப்பு ஆதரவு - லீலாதேவி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் அத்தனை விடயங்களிற்கும் மௌனமாகவே இருந்து வந்த நிலையில் தமது சுகபோக மற்றம் தன்னலம் சார்ந்தே ஜனாதிபதி வேட்பாளரிற்கு அதரவு வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இந்த குற்றச்சாட்டினை வடக்க கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா சுமத்தியுள்ளார்.

நேற்ற்றையதினம் கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த மாதம் 22ம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தபோது , குறித்த காலப்பகுதியில் எமது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சிதைத்து புதிய அமைப்புக்களை தமது சுயலாபத்திற்காக பயன்படுத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் அங்கு தெரிவித்திருந்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

இதன்போது வவுனியாவை சேர்ந்த சிலர் தொடர்பில் கருத்து கூறவேண்டி ஏற்பட்ட நிலையில், அதற்காக தாம் அவர்களை விலக்கியோ அல்லது அவர்களை குறை கூறும் வகையிலோ செயற்படவில்லை என்றும் அவர்களின் போராட்டமும் தமது போராட்டமும் ஒன்றே என்றும் லீலாதேவி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அனைவரும் ஒரே விடயத்தை முன்வைத்தே போராடிவருகின்றோம் எனக்கூறிய அவர், தமது போராட்டத்தை அரசியல் சுய இலாபங்களிற்காக சிலர் பயன்படுத்துகின்றதாக அன்றைய ஊடக சந்திப்பில் தாம் தெரிவித்திருந்ததாகவும் லீலாதேவி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.