மீண்டும் ஈராக்கில் இணைய சேவைக்கு கட்டுப்பாடு விதிப்பு!

ஈராக்கில் இணையத் தொடர்பு சேவைக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாக்தாதிலும், நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.


அவற்றில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றித் தவறான தகவல் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் முதலாம் திகதி ஈராக்கில் கடுமையான வன்முறைகள் இடம்பெற்றன. ஆறு நாட்கள் நீடித்த கலவரத்தில் 157 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் பெரும்பாலோர் பாக்தாத்தைச் சேர்ந்தவர்களாவர். உயரமான இடங்களிலுள்ள மறைவான பகுதிகளிலிருந்து பலர் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இணையத்தில் சமூக ஊடகங்களுக்கான கட்டுப்பாட்டை அரசாங்கம் தளர்த்தியதைத் தொடர்ந்து, அங்கு இரண்டு வாரங்களாக அமைதி நிலவியது.

ஆனால், கடந்த இரண்டு நாட்களாக ஷியா இனத்தவரின் புனிதத் தலமான கர்பலா அருகே மீண்டும் கலவரம் ஏற்பட்டது.

கடந்த மாதத் தொடக்கத்திலிருந்து இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து உயிரிழ்தோர் தொடர்பிலான தகவல்களை வெளியிடுவதை ஈராக்கிய அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.