மக்களின் வாழ்வுக்காக 24 மணி நேரமும் சேவை - சஜித்!

நாட்டு மக்களை வாழ்விப்பதற்காக 24 மணிநேரமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.


திகனயில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாம் முன்வைத்துள்ள கொள்கை பிரகடனத்தை நன்றாக வாசித்துப் பார்க்குமாறும், அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கும் தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், தாம் கடுமையாக சுகயீனமடைந்திருந்தமையினால், அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை பார்ப்பதற்கு வரமுடியாது போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.