நடிகர் கமல்ஹாசனின் 65ஆவது அகவைநாள் இன்று!!

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 65ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் என பன்முகத் தன்மைக்கொண்ட கமல்ஹாசன் தனது 5வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் களம்கண்டிருந்தார்.
1960ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படம்தான் இவரின் முதல் திரைப்படமாக அவரின் திரையுலக பயணத்திற்கு அடிக்கல் இட்டது.
இந்தத் திரைப்படத்தில் நடித்தமைக்காக ஜனாதிபதிவிருது பெற்ற இவர், 1975 ஆம் ஆண்டில் கைலாசம் பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த அபூர்வ ராகங்கள் எனும் திரைப்படத்தில் தான் முதன் முதாலாக முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதில் தன்னை விட வயது கூடிய ஒரு பெண்ணைக் காதல் செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மத்தியிலும் பிரசித்து பெற்றார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் பாலு மகேந்திரனின் திரைப்படத்திலும், 1987ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
படிப்படியாக நடிப்பு துறையில் தன்னை வளரத்துக்கொண்ட இவர், பேசும் காவியங்கள்,  மூன்றாம் பிறை, நாயகன், வறுமையின் நிறம் சிவப்பு, குணா, இந்தியன், தெனாலி, அன்பே சிவம், தசாவதாரம், சிவப்பு ரோஜாக்கள், சலங்கை ஒலி, தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், ஹேராம் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்து உச்சம் தொட்டார்.
இவ்வாறு நடிப்பு மட்டுமன்றி தயாரிப்பு துறையிலும் கால்பதித்த இவரின் திறமைகளை பாராட்டி 1979 ஆம் ஆண்டில் கலைமாமணி விருது வழங்கி தமிழ் நாட்டு அரசு கௌரவித்தது .
இவ்வாறாக பத்மசிறீ, பத்ம பூசண், என பல விருதுகளை தன்வசப்படுத்திய கமல்ஹாசன், இதுவரை 4 தேசிய விருதுகளையும், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளையும் பெற்று சாதனை படைத்தார்.
ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அதற்குரிய கதாபாத்திரமாகவே வாழும் தனிசிறப்பு கொண்ட நடிகராக அனைவராலும் போற்றபடும் இவரை கலைத்தாயின் செல்ல பிள்ளை என்றே திரையுலக பிரபலங்கள் வர்ணிக்கின்றனர்.
இதனை தமிழ் சினிமாவில் கமல் தனது பொன்விழாவை கண்டபோது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஆன்றோரும் சான்றோரும் அமர்ந்திருந்த மேடையில் கலைத்தாய் எங்களை போன்ற கலைஞர்களை கையைப்பிடித்து அழைத்து செல்கிறாள். ஆனால் கமலை மட்டும் இடுப்பில் தூக்கி வைத்து செல்கிறாள் என பிரபல கலைஞர் ஒருவர் பாராட்டுவதில் இருந்து உணர்ந்துகொள்ள முடியும்.
“நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன், ரசனை மிகுந்த ரகசியக் கவிஞன்” என்ற வரிகளுக்கு சொந்தகாரரான கமல்ஹாசனுக்கு நாமும் இனிமையான பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.