யாழில் சுழன்ற டெல்லியின் நச்சு காற்று!!

நேற்று இரவிலிருந்து யாழ்ப்பாணத்தில் பலரும் பனி என்று நினைத்திருந்தார்கள். ஆனால், இலங்கைக்கான அமெரிக்க தூதரக AQI – Air Quality Index 150 ஜ தாண்டியிருந்தது. டெல்லியின் மாசடைந்த காற்று இலங்கை வரை தாக்கியிருக்கியிருக்கிறது என்கிறது National building research organisation. ஆனால் காரணம் சரிவரத் தெரியவில்லை என்கிறது Central Environment Authority.


கூடுதலாக பட்டாசு வெடிக்கும் பண்டிகைக் காலங்களில் இந்த காற்று மாசு அதிகரிப்பது உண்டு. தீபாவளியில் இந்திய- டெல்லி கல்கத்தா திக்குமுக்காடும். பட்டாசு குறித்து எவ்வளவு சொன்னாலும் யாரும் கேட்பதில்லை. எங்கள் ஒருநாள் சந்தோஷம் என்று சண்டைக்கு வருவார்கள். இப்படிச் சொல்லி காரண காரியமில்லாமல் கொளுத்திப்போடுவார்கள்.

இந்தத் திடீர் காற்று மாசுக்கான காரணத்தை இலங்கை சொல்லாவிட்டாலும் பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இது காலப்போக்கில் குறைந்துவிடும். இப்போது AQI 93 தான் காட்டுகிறது. ஆனால் நூறைத் தாண்டினாலே ஆஸ்மா போன்ற நோயாளிகளுக்கு ஆபத்து. 150 தாண்டினால் எல்லோருக்கும் ஆபத்து. உயிர்க்கொல்லி நோய்கள் வருவது நிச்சயம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.