அரச ஊழியர்களிற்கு இன்று இறுதி சந்தர்ப்பம்!

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியாமல் போன சகல அரச ஊழியர்களுக்கும் இன்று மீண்டும் இறுதி சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



கடந்த நான்கு தினங்களில் அரசஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாக்களிக்கத் தவறிய சகலருக்கும் இன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையில் தபால் மூலம் வாக்களிக்க அவகாசம் வழங்கியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 659317 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.