முகமூடி அணிவது மிகவும் பாதுகாப்பானது!!
கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் அதிகரித்துள்ளமையினால், சிறுவர்களுக்கு முகமூடி அணிவிப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்த நிலைமை காரணமாக, சிறுவர்கள் சுவாசிப்பதில் சிக்கல் நிலைமையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் தீபால் பெரேரா எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
இந்தியாவின் புது டில்லியில் ஏற்பட்டுள்ள வளி மாசடைவு, தற்போது இலங்கையை பாதித்துள்ளது என சந்தேகிப்பதாக தேசிய கட்டட ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
கொழும்பு நகருக்கு மேலே, வளிமண்டலத்தில் உள்ள தூசு துகளிகளின் அளவு நூற்றுக்கு 100 வீதத்தை விடவும் அதிகரித்துள்ளதாக அந்த மையத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கொழும்பு நகரின் மேற்பரப்பு வானில் நேற்று முன்தினம் முதல் முகில்கல் போன்ற நிலை காணப்படுகின்றது.
தூசுத் துகள்களே அவ்வாறு தென்படுவதாக தேசிய கட்டட ஆய்வு மையத்தின் நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
ஒரு கன மீற்றருக்கு அண்ணளவாக 50 மைக்ரோ கிராமாக காணப்படும் தூசு துகள்கள். நேற்றைய தினத்தின்போது, 70 மைக்ரோ கிராமாக அதிகரித்துளு;ளது.
இதனிடையே, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று பிற்பகல் கொழும்பின் காற்றின் தர குறியீட்டை 102 ஆக புதுப்பித்திருந்தது.
இதேநேரம், நாட்டின் ஏனைய சில பாகங்களிலும், இந்த நிலைமையை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சுவாசம் தொடர்பான நோயுடையலவர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என தேசிய கட்டட ஆய்வு மையத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் விளக்கமளித்துள்ள சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் தீபால் பெரேரா, சிறுவர்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லும்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும், முகமூடியை அணிவது பாதுகாப்பானதாக இருக்கும்.
தொடர்ச்சியான நோய் அறிகுறி ஏதாவது தற்போதைய நாட்களில் அவதானிக்கப்படுமாயின், மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
எவ்வாறிருப்பினும், குறித்த நிலைமை தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் தீபால் பெரேரா, சிறுவர்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை