திரைப்பயணத்தில் ஐம்பது ஆண்டுகள் பூர்த்தி செய்த அமிதாப் பச்சன்!!
பொலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் திரையுலகில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அமிதாப் பச்சனின் மகனும், பொலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் தனது தந்தை திரையுலகில் 50 ஆண்டுகள் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து தனது ருவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் பொலிவுட் பிரபலங்கள் பலரும் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்ததுடன், 1970- 1980ம் ஆண்டுகளில் பொலிவுட் திரையுலகில் கொடி கட்டி பறந்தார்.
BIG ‘B’ என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் அமிதாப்பச்சன் 1969ம் ஆண்டு வெளியான ”சாத் ஹிந்துஸ்தானி” அவர் திரைத்துறைக்குள் நுழைந்தார். 1971ம் ஆண்டு ராஜேஷ் கன்னாவுடன் அவர் இணைந்து நடித்த ஆனந்த் படம், அவரை அடுத்த கட்டத்துக்கு அழைத்து சென்றது.
அதன்பிறகு தனக்கென ஸ்டைலை உருவாக்கிக் கொண்ட அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க தொடங்கினார்.
1982ம் ஆண்டு கூலி படத்தில் சண்டை காட்சியின் போது அமிதாப் பச்சனுக்கு படுகாயம் ஏற்பட்டது. 2005 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மிக நீண்ட சிகிச்சைக்கு பிறகு, ஓராண்டு கழித்து உடல்நலம் தேறினார்.
1984ம் ஆண்டு நடிப்புக்கு சற்று ஓய்வு கொடுத்த அவர், அரசியலில் தடம் பதித்தார். அதே ஆண்டில் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி வாகை சூடினார்.
1988ம் ஆண்டு மீண்டும் திரைத்துறைக்கு வந்த அமிதாப், சினிமா தயாரிப்பாளராக உருவெடுத்தார். 2009ம் ஆண்டு மகன் அபிஷேக் பச்சனுடன் அவர் நடித்த ”பா” திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
அமிதாப் பச்சனுக்கு அவரது திரைத்துறைப் பங்களிப்புக்காக 2018ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை