விசே­ட பாராளுமன்ற ­அமர்விற்கு தீர்மானம்!

எதிர்வரும் 11 ஆம் திகதி விசே­ட­மாக நாடா­ளு­மன்­றத்தை கூட்­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.


‘விளையாட்­டுக்கள் தொடர்­பான தவ­று­களைத் தடுத்தல்’ என்ற சட்­ட­ வரைபை விரைவில் நிறை­வேற்ற வேண்டும் என்ற கார­ணத்தை அடிப்படையாகக் கொண்டு வரும் 11ஆம் திகதி முற்­பகல் 11.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.

நிலை­யியற் கட்­டளை இலக்கம் 16இற்கு அமைய பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்க விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு இணங்க விசே­ட­மாக நாடாளுமன்றத்தை கூட்­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் நேற்று பிற்­பகல் கூடிய நாடா­ளு­மன்ற அலு­வல்கள் பற்­றிய குழுக் கூட்­டத்தில் இந்த தீர்­மானம் எடுக்கப்பட்­டது. இதற்­க­மைய 11ஆம் திகதி ‘விளை­யாட்­டுக்கள் தொடர்­பான தவ­று­களைத் தடுத்தல்’ சட்­ட வரைபு விவா­தத்­துக்கு எடுத்­துக் கொள்ளப்­படும்.

அத்­துடன் தேசிய புத்­தாக்க முக­வ­ராண்மைச் சட்­ட வரைபை இரண்­டா­வது மதிப்­பீட்­டுக்கு எடுத்­துக்­கொள்­வ­தற்கும் நாடா­ளு­மன்ற அலு­வல்கள் பற்­றிய குழுக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

நவம்பர் மாதம் 11 ஆம் திகதி இடம்­பெறும் அமர்வின் பின்னர் எதிர்­வரும் டிசம்பர் 3ஆம் திக­தியே நாடா­ளு­மன்றம் மீண்டும் கூட­வுள்­ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.