ஜேர்மனி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து!

ஜேர்மனியில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.


Teutschenthal நகராட்சியில் உள்ள சுரங்கத்திலேயே உள்ளூர் நேரப்படி நேற்று(வெள்ளிக்கிழமை) 9 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சுரங்க பணியில் சுமார் 100 பேர் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வெடி விபத்தின் போது சுரங்கத்திற்கு அடியில் 40 பேர் இருந்தாகவும், அவர்களின் இருப்பிடம் பாதுகாப்பாக இருப்பதாக சுரங்கத்தை இயக்கி வரும் MDR SACHSEN-ANHALT நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், மீட்கப்பட்ட இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெடி விபத்தில் தப்பி 700 அடி ஆழத்தில் பத்திரமாக இருக்கும் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.