பங்களாதேஷ் நோக்கி நகரும் புல்புல் சூறாவளி!!

வங்காள விரிகுடா கடற்பரப்பில் விருத்தியடைந்த (Bulbul) புல்புல் சூறாவளி வட அகலாங்கு 19.5N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.7E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


குறித்த திணைகளம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இது அடுத்த 24 மணித்தியாலங்களில் புல்புல் சூறாவளி வடக்கு மேற்கு வங்காளம் (இந்தியா) - பங்களாதேஷ் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வட அகலாங்கு 15N – 22N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84E - 94E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, மிகவும் கொந்தளிப்பான கடல், மிகப் பலத்த காற்று போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் (குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்) நவம்பர் 11ஆம் திகதி வரை கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.