விஜய் சேதுபதியின் அடுத்த போராட்டம்!
விஜய் சேதுபதியுடன் மேகா ஆகாஷ் முதல் முறையாக இணைந்து நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் 33 ஆவது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இசக்கி துரை தயாரித்து வருகிறார். வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. VSP33 என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருந்த இந்த படத்தின் டைட்டில் இன்று(அக்டோபர் 31) மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி இந்தப் படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று
டைட்டிலில் உள்ள யாதும் ஊரே என்ற வார்த்தைகளில் மக்கள் ஒன்றாகக் கூடிப் போராடுவது போன்றும், கேளிர் என்ற வார்த்தை முள் வேலியால் பிரிக்கப்பட்டது போன்றும் அமைந்துள்ளது. எனவே சமூக பிரச்னை சார்ந்த மக்கள் போராட்டம் குறித்து இந்த திரைப்படம் பேசப் போவதாகத் தெரிகிறது. நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைக்கவுள்ள இந்த படத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கவிருக்கிறார்.
விஜய்சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. மேலும் விஜய்யுடன் இணைந்து தளபதி 64 , மாமனிதன், கடைசி விவசாயி, லாபம், க/பெ.ரணசிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
கருத்துகள் இல்லை