இதற்கு ஏன் நமது வாக்கு?
மைத்ரி தனது பதவி முடிவுறும் தறுவாயில் வெளிநாட்டு பெண் ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்த ஒரு சிங்களவருக்கு பொது மன்னிப்புக் கொடுத்துவிட்டு விடை பெறுகிறார்.
சிங்கள நீதி இது.
மைத்ரிக்கு வாக்களித்தால் 'அரசியல் கைதிகளை விடுவிக்க அழுத்தம் கொடுப்போம்' என்று தமிழ் மக்களிடம் கதை விட்ட தமிழரசுக் கட்சி ஒரு தமிழ் கைதியைக் கூட விடுவிக்க முயலவில்லை - அவர்கள் விடப் போவதில்லை என்பது வேறு கதை.
தற்போது சஜித்திற்கு வாக்களித்தால் 'அரசியல் கைதிகளை விடுவிக்க அழுத்தம் கொடுப்போம்' என்ற அதே புலுடாவை மீண்டும் விட்டுக் கொண்டிருக்கிறது தமிழரசுக் கட்சி.
எமது மக்களுக்கும் மறதி அதிகம்.
அதை நம்பி சஜித்திற்கு வாக்களிக்க தயாராவது போல் தெரிகிறது.
ஏனைய அரசியல் கைதிகளை விடுவோம்,
யாருக்குமே 'அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை பொங்கலுக்கு விடுவிப்பதாக அவரது மகளுக்கு வாக்குறுதி கொடுத்த மைத்ரி யின் உறுதிமொழி என்னாயிற்று?' என்று தமிழரசுக் கட்சியிடம் கேட்கத் தோன்றவில்லை..
பாவம் பல்லாயிரக்கணக்கான ஆனந்தசுதாகரன்களும்/ அவர்கள் குழந்தைகளும்...
சிங்கள நாட்டு தேர்தலில் அவர்களுக்கான நீதி என்றும் கிடைக்கப் போவதில்லை - ஏனென்றால் தீர்வு தீவுக்கு வெளியே இருக்கிறது.
சஜித்தின் பிரதான கோசங்களில் ஒன்று 'நிலுவையிலுள்ள மரண தண்டனை கைதிகளை தூக்கில் தொங்க விடுவது'.
அதில் பெரும்பாலானவர்கள் அப்பாவி தமிழர்கள்.
சஜித் ஆட்சிக்கு வந்தவுடன் பல தமிழர் வீடுகள் இழவு வீடாகப் போகிறது.
கோத்தபாய வெளியாகவே கொல்வான் / சஜித் சட்டத்தைப் பாவித்துக் கொல்லப் போகிறான்.
இதற்கு ஏன் நமது வாக்கு?
கருத்துகள் இல்லை