பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.!

1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி இராணுவ கூட்டுப்படைத் தளத்தினுள் கரும்புலிகள் ஊடுருவி சிங்கள இராணுவத்தை பேரதிர்ச்சிக்குட்படுத்தினார்கள்.

இக் கரும்புலித்தாக்குதல் சிங்கள் இராணுவக் கட்டமைப்பில் திடீரென சீர்குலைவை ஏற்படுத்தி அவர்களை நிலைகுலைய செய்து , தடுமாற்றத்துக் குள்ளாக்கியது.

பூநகரிச் சமரில் விடுதலைப்புலிகளின் பலத்திற்கும் இராணுவ வெற்றிக்கும் உறுதுணையாய் அமைந்தவர்கள் கரும்புலிகளே…..!

“கரும்புலிகள்” மூலம் உருவாக்கப்பட்ட இத்தந்திரோபாயம் பூநகரி சமரில் விடுதலைப்புலிகளின் வெற்றியை இலகுவாக்கியது.

இக் கரும்புலித் தாக்குதலில் 13 கரும்புலிகள் தேசப்புயல்களாய் வீசினர்.

– உயிராயுதத்திலிருந்து.....

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.