96 பிரபலம் விஜய் படத்தில்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 64ஆவது படமாகும். இந்தப் படத்தில் நடிகர் விஜய் பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரென கூறப்படுகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்தன.


அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்தவர். மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.

தற்போது நடிகை கௌரி கிஷானையும் விஜய் படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் விஜய் சேதுபதி-திரிஷா நடித்த ‘96’ படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

விஜய் படத்தில் நடிப்பதை கௌரி கிஷான் சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறும்போது, “விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருடைய ஆசிர்வாதத்தால் இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுளள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.