வளி மாசடைவதினால், நுரையீரல் தொற்றா நோய்களும் ஏற்படும் - இனோக்கா சுரவீர!!
கொழும்பில் அண்மையில் ஏற்பட்பட வளி மாசடைந்த நிலை முற்றாக நீங்கியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் வங்களா விரிகுடாவில் வீசிய காற்றினால் இந்தியாவில் நிலவிய சீரற்ற காற்று நிலை ,இலங்கைக்கும் பரவியுள்ளதாகவும் இதுபற்றி எச்சரிக்கையுடன் செயற்படுதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் இனோக்கா சுரவீர உரையாற்றுகையில் , வளி மாசடைவதினால் பல்வேறு சுகாதார நெருக்கடிகள் தலைதூக்கியிருப்பதாகவும், இதனால் நுரையீரல் நோய் மாத்திரமன்றி ஏனைய தொற்றா நோய்களும் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வளி மாசடைவதால் நீண்டகால மற்றும் குறுங்கால சுகாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. உலக சனத்தொகையில் 12 தசம் ஆறு மில்லியன் பேர் வளி மாசடைதல் தொடர்பான நெருக்கடியினால் உயிரிழக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் 38 இலட்சம் பேர் ஆசிய நாட்டவர்கள் என்றும், எதிர்காலம் பற்றி கவனம் செலுத்தி வளி மாசடைவதை கட்டுப்படுத்துவது காலத்தின் தேவை எனவும் குறிப்பிட்ட அவர் மனித செயற்பாடுகளே வளி மாசடைவதற்கான பிரதான காரணம் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை