ஈழ மண்ணெங்கும் ரிசி மைந்தர்நாள்!!
இரவுகளுக்கும் இறக்கை முளைக்கும்
நட்சத்திரங்களுக்கும் கண்ணீர் கசியும்
அவர்களின் நினைவால்
வானம் ஒரு முறை மண்ணைத் தொட்டு அகலும்
ரிசி புதல்வர்களின் வலியை அளந்தவாறு
புரட்சிக் கீதங்களில் உறையும் உலக இசை யாவும்
அவர்களைப் பாடியதாய்
கார்த்திகை ஓர்நாளில்
புன்னகைக்குமென
ஈழ மண்ணங்கும் நதியாகும் திவலை
கல்லறை தேடிய கரங்களில் உரமேறும்
ஊழியைக் கடந்த இனத்தின் பாடல்களால்
பறவையாகி
தீராத அழுகையும் எழுகையும் மோதுங் கணங்களை கருநாகமாய்
படம் பிடிக்கும் துரோகம்
ஆனாலும் ஆகாய மைந்தரைச் சுமந்த மனம்
மாவீரம் பாடி பறக்கத் துணியும்
இது கார்த்திகை நாளென
த.செல்வா
12.11.2019
கிளிநொச்சி.
நட்சத்திரங்களுக்கும் கண்ணீர் கசியும்
அவர்களின் நினைவால்
வானம் ஒரு முறை மண்ணைத் தொட்டு அகலும்
ரிசி புதல்வர்களின் வலியை அளந்தவாறு
புரட்சிக் கீதங்களில் உறையும் உலக இசை யாவும்
அவர்களைப் பாடியதாய்
கார்த்திகை ஓர்நாளில்
புன்னகைக்குமென
ஈழ மண்ணங்கும் நதியாகும் திவலை
கல்லறை தேடிய கரங்களில் உரமேறும்
ஊழியைக் கடந்த இனத்தின் பாடல்களால்
பறவையாகி
தீராத அழுகையும் எழுகையும் மோதுங் கணங்களை கருநாகமாய்
படம் பிடிக்கும் துரோகம்
ஆனாலும் ஆகாய மைந்தரைச் சுமந்த மனம்
மாவீரம் பாடி பறக்கத் துணியும்
இது கார்த்திகை நாளென
த.செல்வா
12.11.2019
கிளிநொச்சி.
கருத்துகள் இல்லை