ஜனாதிபதி வேட்பாளர் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களுக்காக தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நீர்க்கொழும்பு நகரில் நேற்று (11) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் தனிப்பட்ட வகையில் கவலையடையும் அதேவேளை அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதச கூறினார்.
இதன் போது உரையாற்றிய காவிந்த ஜயவர்தன குற்றச்செயல்கள், போதைபொருள் விற்பனை மற்றும் கொள்ளை சம்பவங்கள் ஆகியவை கட்சி பேதமின்றி ஒழிக்கப்படும் என தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச தூய்மையான ஒருவர் எனவும், ஊழல்வாதிகள் அவரின் அமைச்சரவையில் இருக்க போவதில்லை என்பதால் புதிய ஒழுக்கமுள்ள நாட்டை அவர் கட்டியெழுப்புவார் எனவும் அவர் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கு தொலைக்காட்சி பெட்டியை பெற்றுக்கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சி என கூறினார்.
அதேபோல் இளைஞர்களுக்கு டெனிம் காற்சாட்டையை அணிய கூடிய யுகத்தை ஏற்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இளைஞர்களுடன் வேகமாய் இயங்க அனைத்து மக்களும் ஒன்லயினில் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அதன் நோக்கம் கருதியே சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதன் போது உரையாற்றிய சஜித் பிரேமதாச ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி தான் தனிப்பட்ட வகையில் கவலை அடைவதாகவும் அதேபோல் தாக்குதலால் சேதமடைந்த சகல தேவாலயங்கள் குறித்து வேதனைபடுவதாகவும் தெரிவித்தர்.
குறிப்பாக அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாகவும் சஜித் பிரேமதாச கூறினார்.
தனது ஆட்சியில் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு கடுமையான முடிவுகளை எடுப்பதாகவும் தான் நாட்டின் தலைவராக செயற்படும் போது இடம்பெறும் எந்தவொரு விடயத்திற்கும் பொறுப்பேற்பதாக தெரிவித்த அவர் பயங்கரவாதிகளுக்கும், கொலைகாரர்களுக்கும் தான் ஒருபோதும் மன்னிப்பு வழங்க போவதில்லை எனவும் தெரிவித்தார்.
அரச பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனவும் நாட்டு மக்கள் தங்களுக்குள்ள உரிமைகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
எவருடைய ஆலோசனைகளுக்கும் தான் அடிப்பணிய போவதில்லை எனவும் எந்தவொரு நிபந்தனைகளுக்கும் அடிப்பணிந்து வேட்பாளர் பதவியை பெறவில்லை எனவும் ஆனபடியால் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாட்டுக்கு சேவையாற்றுவது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மொறட்டுவ பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்திலும் சஜித் பிரேமதாச உரையாற்றினார்.
இங்கு உரையாற்றிய அவர் மேசன் தொழிற்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
குறிப்பாக எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு பின்னர் மேசன் கைத்தொழில் துறையில் பொற்காலம் ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் அதன்மூலம் வளமிக்க ஒரு இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, சஜித் பிரேமதாசவுக்கும், கலைஞர்களுக்கும் இடையே இன்று காலை பத்தரமுல்லையில் முக்கிய சந்திப்பு ஒன்று நடைப்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர் அதிகாலை 2.40 வரை தன் மீது நம்பிக்கை வைத்து காத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச கலைஞர்களுக்கு தொழில்சார் நன்மதிப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.
தானும் ஒருவகையில் கலைஞர் எனவும் தன்னால் கிடார், டிரம், பியானோ மற்றும் ஓகன் ஆகிய இசை கருவிகளை இசைக்க முடியும் எனவும் குறிப்பாக தன்னால் பாடமுடியும் எனவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை