சிம்பாப்வேயில் வறட்சியால் யானைகள் உயிரிழப்பு!!
சிம்பாப்வேயில் நிலவும் கடுமையான வறட்சியால், அந்நாட்டில் உள்ள வாங்கே தேசிய பூங்காவில் 200 இற்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன.
சிம்பாப்வேயில் நிலவும் கடுமையான வறட்சியால் ஏனைய விலங்கியல் பூங்காக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், கடுமையான வறட்சியால் ஒட்டகச்சிவிங்கி, காட்டெருமை, மான் இனங்கள் என அனைத்து விலங்கினங்களும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில பறவை இனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
எனினும் மழை பெய்தால் மட்டுமே இந்த நிலைமை மாறும் என கூறுப்படுகின்றது.
மேலும் நிலங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளன. அதேநேரம் நாட்டில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து தேசிய அவசர நிலையை சிம்பாப்வே அரசு அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் தண்ணீர் நிரம்பி காணப்பட்ட நீர்நிலைகள் தற்போது வறண்டு காணப்படுகின்றன. வறட்சியால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உதவும் வகையில், தண்ணீர் நிரப்பும் பணிகளில் ரேஞ்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் சிம்பாப்வேயில் 85 ஆயிரம் யானைகள் உள்ளதாகவும், தண்ணீர் இல்லாமல், வன விலங்குகள் அருகில் உள்ள மனிதர்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் யானைகள் நுழைகின்றன. இதனால், மனிதர்கள் மற்றம் வனவிலங்குகள் இடையே மோதல் ஏற்படுகிறது.
இதனால் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து 600 யானைகள், மற்றும் சிங்கங்கள், காட்டு நாய்கள், 50 காட்டெருமைகள், 40 ஒட்டசிவிங்கிககள், 2000 யானைகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த விடையம் குறித்து கருத்த வெளியிட்டுள்ள அந்நாட்டின் அந்நாட்டின் உயிரியல் பூங்காவின் செய்தி தொடர்பாளர் பரோவோ, ”சுற்றுச்சூழல் பாதிப்புகளை சுமக்கும் திறனை விலங்குகள் மீறிவிட்டன. இதனை சரிசெய்யாவிட்டால், விலங்குகளால் அச்சுறுத்தல் அதிகரிக்கும்” என கூறியுள்ளார்.
இதேவேளை, சிம்பாப்வே நாட்டில் அதிகமுள்ள யானைகள் மற்றும் அதன் தந்தங்களை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வறட்சியை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி கடந்த 2016 முதல் தற்போது வரை 101 யானைகளை விற்று 2.3 மில்லியன் யூரோக்களை சிம்பாபப்வே அரசு லாபம் ஈட்டியுள்ளது.
சீனா மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்சுக்கு அதிக யானைகள் விற்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை